
மூத்தோர் ஜோதிட ஞானம். புள்ளியியல் பார்வையில்.
வணக்கம்! AIML Astrology தங்களை அன்புடன் வரவேற்கின்றது!
தங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்!
எங்களது கட்டண சோதிட சேவைகளை பெற, இங்கே உரலியை அழுத்தவும்.
AIMLAstrology – ஒரு எளிய அறிமுகம்
AIMLAstrology YouTube Channel
பொதுவாக படிக்கும் ஆர்வம் மற்றும் நேரம் குறைந்து பொதுமக்கள் காட்சி ஊடகங்களில் அதிகம் நேரம் செலுத்துவது அதிகரித்து விட்டபடியால் நாங்களும் காணொலிகளாக உள்ளடக்கம் என்பதை உருவாக்குவதை நோக்கிக் கொஞ்சம் நகர்ந்து உள்ளோம்.
எங்களுது சில கட்டுரைகளில் சொல்லப்பட்ட திரண்ட கருத்துக்களை மிகவும் விரிவாக காணொளிகள் வடிவில் நீங்கள் இங்கே காணலாம். மிகுந்த நேரம் பிடித்த தனிமனித உழைப்பின் விளைபொருளாக உருவாகும் இந்தக் காணொளிகள் உங்களுடைய தனிப்பட்ட அறிவுத்தேடல்களை பூர்த்தி செய்யக்கூடும். இவற்றை உங்கள் நண்பர்களுக்கும் நீங்கள் பரிந்துரை செய்யலாம். இது ஒரு ஊர் கூடி தேர் இழுக்கும் முயற்சி.
டாக்டர் ரமேஷ் அவர்கள் 2023 ஆம் ஆண்டு முழுக்க நடத்திய தமிழில் இந்திய சோதிடக் கணித வகுப்புகளின் தொகுப்புக்கு இங்கே கிளிக் செய்யவும்.
2024-2026: பொதுமக்களுக்கான ஜோதிடம் என்ற நீண்ட தொடரில் டாக்டர் ரமேஷ் தங்கவேல் பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். ஜோதிடத்தை தாண்டி பொதுவான மனித குல வரலாறு மற்றும் நவீன அறிவியல் காணொளிகளும் என்னுடைய இந்த முயற்சியில் இடம் பெற்றுள்ளன. அந்தக் காணொலிகளை நீங்கள் இங்கே பார்க்கலாம்.
இந்த வலைத்தளத்தின் நோக்கம்
சோதிடம் வேதங்களின் கண் என்று போற்றப்படுகிறது. மனிதகுலம் பெறத்தக்க மிகப்பெரிய கணித அறிவாக சோதிடம் நம் முன்னோர்களால் கருதப்பட்டது. சோதிடத்தினை தரவு அறிவியலின் (data science) துணை கொண்டு நோக்கினோம் என்றால் சோதிடத்தின் உள் கட்டமைப்பில் நமது முன்னோர்கள் செய்து வைத்துள்ள மகத்தான சாதனைகள் புலப்படும். இன்றைய நவீன புள்ளியியல் மற்றும் தரவு அறிவியலின் அடிப்படை கோட்பாடுகளாகவும் உச்சக்கட்ட வளர்ச்சியாகவும் சொல்லப்படுகின்ற பல விஷயங்களையும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது முன்னோர்கள் சோதிட துறையில் மிக நேர்த்தியாகவும், தெளிவாகவும், போகின்ற போக்கில் மிகவும் சாதாரணமாகவும் பயன்படுத்தி உள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு (artificial intelligence), இயந்திர வழிக் கற்றல் (machine learning) மற்றும் ஆழ்ந்த கற்றல் (deep learning) மூலம் நமது முன்னோர்களின் உருவாக்கி வைத்துள்ள கணித அறிவின் உச்சங்களை நாம் அறிந்து கொள்ளலாம். அவர்களின் புள்ளியியல் / தரவு அறிவியல் அறிவுக்கட்டுமானத்தை சரியாக புரிந்து கொள்வதன் மூலம், மற்ற துறைகளிலும் அவற்றை பிரயோகப்படுத்தி மேம்பட்ட தீர்வுகளை அடைய முடியும்.
எங்களது இந்த வலைப்பூவில் டாக்டர் ரமேஷ் தங்கவேல் சோதிடத்தில் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தேவை பற்றியும், எவ்வாறு செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழிக் கற்றலை சோதிடத்தில் கொண்டு வர முடியும் என்றும் அதற்கு தேவையான அடிப்படை அலகுகள், கட்டமைப்புகள், சீர்த்திருத்தங்கள் பற்றியும் தனது கருத்துக்களை கட்டுரை வடிவில் பகிர்கின்றார். சோதிடத்தில் அவர் காணும் தரவு அறிவியல் கோட்பாடுகளையும் உத்திகளையும் கூட அவரது கட்டுரைகளில் விரிவாக விளக்குகிறார். அவரது இந்த முயற்சிகளின் மூலம் AIMLAstrology.in மூலம் சோதிடத்தை அறிவியல் சார்ந்து மேலான ஒரு தளத்துக்கு எடுத்துச்செல்வது எங்களது குறிக்கோள் ஆகும்.
நாங்கள் இந்த தளத்தின் மூலம் எங்களைப்போல் சோதிடத்தினை தரவு அறிவியல் சார்ந்து முன்னெடுத்து செல்லும் ஆர்வம் உள்ளவர்களை ஒருங்கிணைத்து, அவர்களுடன் இணைந்து அனைவருக்கும் பயன்படும் வகையில் தரவு தொகுப்புகள், கருவிகள், முறைகள், மென்பொருட்கள், வகுப்புகள், ஆராய்ச்சிகள் ஆகியவற்றை முன்னெடுக்க விரும்புகிறோம்.
உங்களுக்கு இந்த முயற்சியில் பங்கு பெற ஆர்வமும், சோதிடம் அல்லது தரவு அறிவியலில் தொழில் அறிவும், சோதிட சமூகத்திற்கு சேவை செய்ய மனமும் நேரமும் இருந்தால், எங்களை நீங்கள் மின்னஞ்சல் (admin@aimlastrology.in) மூலம் தொடர்பு கொள்ளலாம். இது ஒரு நீண்ட பயணம் ஆக இருக்கக்கூடும். இந்த முயற்சியின் விளைபொருட்கள் நம் சந்ததிகளுக்கு நாம் விட்டுச்செல்லும் அறிவுப்பரிசாக அமையும். இந்த முயற்சியில் பங்கெடுத்துக்கொள்ள நாங்கள் உங்களை அன்போடு அழைக்கிறோம். வாருங்கள் இணைந்து பயணிப்போம்!
பொருளாதார தன்னிறைவு இன்றி எந்த ஒரு நீண்ட கால முயற்சியும் சாத்தியம் இல்லை. பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை என்பது ஐயன் வள்ளுவர் வாக்கு. எனவே, இந்த வலைத்தளத்தை மற்றும் எங்களுடைய முயற்சிகளை தொடரும் பொருட்டு, AIML Astrology LLC என்ற நிறுவனத்தை டாக்டர் ரமேஷ் தங்கவேல் அவர்கள் தற்போது வாழும் நியூ ஜெர்சி, அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு ஆரம்பித்து எங்கள் முயற்சிகளை தொடர்கிறோம்.
அவரது தினசரி வருமானம் / ஜீவனம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பொருள் இந்த தளத்தின் மூலம் வரவில்லை. இந்த தளத்தின் மற்றும் எங்கள் யூடியூப் சேனலின் பராமரிப்பு செலவு தாண்டிய வருமானம் அனைத்தும் ஜோதிடத்தை மேம்படுத்தும் பொருட்டோ அல்லது அவர் சேவை புரியும் சமூகத்தின் நலனுக்காகவே மட்டுமே செலவிடப்படுகின்றன.
2019இல் நாங்கள் ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து பல வருடங்களாக 100 %க்கும் அதிகமான வருமானம் நன்கொடைகளாக நாங்கள் வாழும் சமூகத்துக்கு திருப்பி அளிக்கப்பட்டு உள்ளது.
ஜோதிடத்தை செயற்கை நுண்ணறிவின் முறையான பயன்பாட்டின் மூலம் அனைத்து மக்களுக்கும் எடுத்துச் செல்லவேண்டும் என்றொரு மாபெரும் லட்சியம் எங்களை வழி நடத்துகிறது. இந்த வலைத்தளம் அந்தப் பயணத்தில் எங்களின் ஒரு கருவி.
AIML Astrology LLC is a registered tax paying private business entity in New Jersey, USA. The copyright of the materials published in internet under the broader umbrella term “AIML Astrology” or “aimlastrology” or its variants belong to Dr Ramesh Thangavel, PhD. No part of the contents published by this entity shall be used for any commercial benefits including teaching or training AI based language models.
