இந்திய ஜோதிடத்தின் புள்ளியியல் தரிசனம்

சோதிடத்தில் செயற்கை நுண்ணறிவும் இயந்திரவழிக் கற்றலும் கட்டுரைகள்

தமிழ் சோதிட கட்டுரைகள் – வணக்கம்! உங்கள் வரவு நல்வரவு ஆகுக!

இந்த வலைப்பூ பக்கம் முனைவர் ரமேஷ் தங்கவேல் ஆகிய எனது சோதிட தமிழ் கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். பிப்ரவரி 2020 முதல் கட்டுரைகள் இந்த வலைப்பூவில் பிரத்தியேகமாக வெளியாகின்றன.

இது ஏற்கனவே சோதிடம் மற்றும்/அல்லது தரவு அறிவியல் சற்று தெரிந்தவர்களுக்கான வலைப்பூ ஆகும். சோதிடத்தை புதிதாக கற்பவர்களுக்கும் மற்றும் ஆழமாக அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் இங்கே தீனி ஏராளம் கிடைக்கும். 

இந்த கட்டுரைகளை அல்லது அவற்றின் சாராம்சத்தை நீங்கள் எங்கேனும் பயன்படுத்த விரும்பினால், உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட எல்லைகளை அறிந்து பயன்படுத்தவும் (மேலும் அறிய: https://aimlastrology.in/disclaimer/).

என்னை பொறுத்தவரையில் இந்த வலைத்தளத்தின் குறிக்கோளை ஒட்டிய முக்கிய கட்டுரைகள் யாவும் ஏற்கனவே எழுதப்பட்டு விட்டன. எனது எழுத்துக்களின் விளைபொருள்தான் கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கப்பட வேண்டும்.

சொல்லுக்கும் செயலுக்கும் ஆன தூரத்தை கடக்கத்தான் காலம் ஆகக்கூடும். பகிர்வதற்கு இன்னும் நிறைய உள்ளது. எழுத வேண்டும் என்ற உந்துதல் இயல்பாக தோன்றும்போது, இங்கே பதிவிடுகிறேன்.

2023 இன் தொடக்கத்தில் இருந்து எனது கட்டுரைகளில் சொன்ன மற்றும் கூடுதல் விடயங்களை இணைத்து சோதிடக் கணிதம் மென்பொருள் மூலம் செய்வதை அறிந்த ஜோதிடர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கோடு யூடியூப் வாயிலாக ‘எக்செல் மென்பொருள் ஊடாக சோதிடக் கணிதம்’ என்ற தலைப்பில் செயல்முறை கணித வகுப்புகளை தமிழில் நடத்தி வருகிறேன். அந்த வகுப்புகளின் தொகுப்பு, நமது வலைத்தளத்தில் தனி பக்கமாகவே உள்ளது. அங்கே செல்ல இந்த லிங்கை கிளிக் செய்யவும் https://aimlastrology.in/vaguppugal/ .

2024ஆம் ஆண்டில் பொதுமக்களுக்கும் அறிவியல் நோக்கில் இந்திய சோதிடத்தை கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கத்தோடு புதிய வகுப்புத் தொடரை ஆரம்பிக்க உள்ளேன். நமது யூடியூப் சானலில் இந்த வகுப்புகள் வெளியாகும். ஆர்வமுள்ளவர்கள் நமது யூடியூப் அலைவரிசையை பின்தொடரலாம்.

To read these articles in English, click here.


 

இதுவரை வந்த  கட்டுரைகளின் உள்ளடக்கம்

தமிழில் இதுவரை 40 கட்டுரைகளை வெவ்வேறு தலைப்புகளில் எழுதி உள்ளேன். இந்திய சோதிடத்தில் புள்ளியியல் கட்டுமானங்கள் – 2021 முதல் வெளிவரும் நெடும் கட்டுரைத் தொடர். இதுவரை 20 பாகங்கள் வெளிவந்து உள்ளன. புள்ளியியல் பக்கத்தில் இருந்து எழுத வேண்டியவை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. எல்லா முறைகளுக்கும் பொதுவான ராசிகள் மற்றும் கிரகங்கள் பற்றி கட்டுரைகள் வந்து விட்டன.

பராசரர் முறையில் உள்ள புள்ளியியல் கட்டுமானங்கள் பற்றி கடந்த இரண்டு வருடங்களாக எழுதி வருகிறேன். சூரியன் முதல் சனி வரையான 7 கிரகங்களை மட்டும் எடுத்துக்கொண்டதன் காரணம், அயனாம்ச முக்கியத்துவம், லக்கினம்பாவகம்,  காரகங்கள் மற்றும் யோகங்கள், கிரகங்களின் உச்ச நீச்சம், கிரகயுத்தம், வக்கிரம், வர்க்கச் சக்கரங்கள் , சட்பலம் (நைசர்கிக பலம் மற்றும் ஸ்தான பலம்), காலபலம்திக்பலம் மற்றும் திருக்பலம் , சேஷ்ட பலம் , சட்பலம் மொத்த அலசல் ஆகியவையும் மற்றும்அஷ்டகவர்க்கம் பற்றிய மூன்று பாகங்களும் வெளிவந்துள்ளன.

உடுதசைகள் (https://youtu.be/UmD7eEJERXc) பற்றிய கட்டுரை தொடர் காணொளி வடிவில்  வெளியாகி உள்ளது. பகிர்வதற்கு நிறைய இருக்கிறது. எழுத நேரம் கிடைப்பதுதான் கடினமாக இருக்கிறது. 😊


 

இதுவரை வெளியாகியுள்ள கட்டுரைகள்


  • T040 உடு மகா தசைகள்: தசை புக்தி அந்தரம் அமைப்பின் நுணுக்கங்கள்
    தசை என்பது ஒரு குறிப்பிட்ட கால சுழற்சி முறையின் தொகுப்பு ஆகும். அது மேலும் மேலும் நுணுகி நோக்கினால் புக்தி, அந்தரம், சூட்சுமம் என்று விரியும். இந்த அமைப்பு ஒரு தனித்துவமான ஒழுங்கில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தசைகள் நட்சத்திரம், ராசி மற்றும் பிற அமைப்புகளை ஆதாரமாக கொண்டு உருவாக்கப்படுகின்றன.
  • T039 புள்ளியியல் பார்வையில் அஷ்டகவர்க்கம் – நிறைவு பாகம்
    அஷ்டகவர்க்கம் பற்றிய குறும் தொடரின் இந்த நிறைவு பாகத்தில், அஷ்டகவர்க்கத்தின் 6 படிநிலைகளில் இறுதியான திரிகோண சுருக்கம், ஏகாதிபத்திய சுருக்கம் மற்றும் சுத்த பிண்டம் பற்றிய புள்ளியியல் ரீதியிலான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இந்த பாகத்தில் அஷ்டகவர்க்கத்தின் சில நவீனகால பயன்பாடுகள் கூடுதலாக விளக்கப்பட்டுள்ளன. பரிமாண சுருக்கம் (dimension reduction) என்ற நவீனகால புள்ளியியல் பயன்பாடு இந்திய சோதிடத்தில் நம் முன்னோர்களால் எவ்வாறு நெடும்காலம் முன்பே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமே! இந்தக் கட்டுரை தொடரின் மூலம் பெறும் தெளிவு, உங்களுக்கு இந்த முறையின் சரியான பயன்பாடு பற்றிய அறிவை இன்னும் அதிகரிக்கக்கூடும்.
  • T038 புள்ளியியல் பார்வையில் அஷ்டகவர்க்கம் – பாகம் 2
    அஷ்டகவர்க்கம் பற்றிய குறும் தொடரின் இந்த இரண்டாம் பாகத்தில் அஷ்டகவர்க்கத்தின் 6 படிநிலைகளில் பின்ன, பிரஸ்தார மற்றும் சர்வ அஷ்டகவர்க்கம் பற்றிய புள்ளியியல் ரீதியிலான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இவற்றின் சமகால பயன்பாட்டில் உள்ள சில நிறை-குறைகள், இங்கே புள்ளியியல் ரீதியாக அலசப்பட்டுள்ளன. ஒரு ஆராய்ச்சி மாணவரின் மனநிலையோடு இதனை படித்து, அஷ்டகவர்க்கம் பின்னே உள்ள கணித மேன்மையை அறிய உங்களை அன்போடு அழைக்கிறேன். இதன் மூலம் பெறும் தெளிவு, உங்களுக்கு இந்த முறையின் சரியான பயன்பாடு பற்றிய அறிவை இன்னும் அதிகரிக்கக்கூடும்.
  • T037 புள்ளியியல் பார்வையில் அஷ்டகவர்க்கம் – பாகம் 1
    இந்திய சோதிடத்தில் புள்ளியியல் எனும் நெடும்தொடரின் இந்தப் பாகத்தில், பராசரர் முறையின் அஷ்டகவர்க்கம் என்னும் கட்டுமானத்தினைப் புள்ளியியல் பார்வையில் அணுகத் தலைப்பட்டிருக்கிறேன். குறுந்தொடரின் இந்த முதல் பாகத்தில் அஷ்டகவர்க்கம் பற்றிய புள்ளியியல் கட்டுமான அமைப்புகள், அதன் கூறுகள், பயன்பாட்டு எல்லைகள் மற்றும் அந்த முறையின் சமகால கணித பின்புல ஒப்பீடு போன்றவை விளக்கப்பட்டுள்ளன.
  • T036 சட்பலம் – தொகுத்த பார்வை
    இந்திய சோதிடத்தில் புள்ளியியல் எனும் நெடும்தொடரில் இந்தப் பாகத்தில், பராசரர் முறையின் சட்பலம் என்னும் கட்டுமானத்தின் திரண்ட திறனாய்வு, அதன் மேன்மைகள், சரியான பயன்பாடுகள் போன்றவை விளக்கப்பட்டுள்ளன. இந்த பாகம் சட்பல கணிதத்தில் உள்ள புள்ளியியல் நுணுக்கங்கள், கட்டுமான மேன்மை ஆகியவை பற்றி உங்களுக்கு அறியத்தரும். சட்பலத்தை நீங்கள் இதுவரை அறிந்திராத மேன்மையானதொரு கோணத்தில் வாசித்து அறிய உங்களை நட்போடு அழைக்கிறேன்!
  • T035 சேஷ்டபலம் (புள்ளியியல் பார்வையில்)
    பராசர முறையின் சட்பலம் பற்றிய இந்தக் குறும் கட்டுரையின் நான்காம் பாகத்தில், கிரக சேஷ்ட பலம் (சேட்டை பலம்) என்ற உயர்நிலை கட்டுமானம் பற்றிய வானியல் மற்றும் புள்ளியியல் பார்வை தொடர்கிறது. இதில் கிரக வக்கிரம், தினகதி மற்றும் சேஷ்ட பலம் பின்னே உள்ள வானியல் மற்றும் புள்ளியியல் நுணுக்கங்கள் விளக்கப்பட்டுள்ளன. கிரக வக்கிரம், தினகதி, உள்வட்ட கிரக வக்கிர விளக்கம் குறித்து இதுவரை நீங்கள் எங்கும் அறிந்திராத வானியல் விளக்கங்கள், தரவு திறனாய்வுகளின் தொகுப்பு இந்த நீண்ட கட்டுரை ஆகும். சோதிடத்தில் உங்கள் புரிதல் அடுத்த நிலைக்கு செல்வதற்கு இந்தக் கட்டுரை உத்திரவாதம்!
  • T034 திக்பலம் & திருக்பலம் (புள்ளியியல் பார்வையில்)
    இந்திய சோதிடத்தில் புள்ளியியல் எனும் நெடும்தொடரில் இந்தப் பாகத்தில், பராசரர் முறையின் சட்பலம் என்னும் கட்டுமானத்தின் உட்கூறாகிய திக்கு பலம் மற்றும் திருக் பலம் ஆகியவை புள்ளியியல் ரீதியில் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளன என்றும் அவற்றின் தனித்துவமும், புள்ளியியல் நுணுக்கங்களும் விளக்கப்பட்டுள்ளன. கிரகப் பார்வைகள் குறித்து இதுவரை நீங்கள் எங்கும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லாத, தரவுகளின் காட்சிப்படுத்துதலோடு (data visualization) கூடிய விளக்கங்கள் இந்தக் கட்டுரையில் உங்களுக்கு கிடைக்கும். சோதிடத்தில் சட்பலத்தினைப் பற்றிய உங்கள் புரிதல் அடுத்த நிலைக்கு செல்வதற்கு இந்தக் கட்டுரை உத்திரவாதம்!
  • T033 காலபலம் (புள்ளியியல் பார்வையில்)
    சோதிடத்தை புள்ளியியல் பார்வையில் அணுகும் இந்த நெடும்தொடரில், இந்தப் பாகம் பராசரரின் சட்பலம் (Shadbala) பற்றிய இரண்டாம் பாகம் ஆகும். இந்தப் பாகத்தில் காலபலம் மற்றும் அதன் 9 கூறுகள் எவ்வாறு புள்ளியியல் ரீதியில் கட்டமைக்கப்பட்டுள்ளன, அவற்றின் தனித்துவம் மற்றும் முக்கியத்துவம் என்ன மற்றும் அதன் பின்னே உள்ள மெ(மே)ன்மையான புள்ளியியல் ஏற்பாடுகள் விளக்கப்பட்டுள்ளன. காலபலம் 360 பார்வையில் சோதிடம், வானியல் மற்றும் புள்ளியியல் என மூன்று பரிமாணங்களிலும் விளக்கப்பட்டுள்ளது.
  • T032 நைசர்கிக பலம் & ஸ்தான பலம் (சட்பலம் புள்ளியியல் பார்வையில்)
    சட்பலம் இந்தக் கட்டுரை கிரக சட்பலம் / ஷட்பலம் / ஆறுவித பலம் என்ற பராசர முறையின் உயர்நிலை கட்டுமானம் பற்றி புள்ளியியல் பார்வையில் அலசுகிறது. சட்பலம் என்றால் என்ன, அவற்றின் கூறுகள், அவற்றின் முக்கியத்துவம், அவற்றை தருவிக்கும் முறையின் புள்ளியியல் தனித்துவங்கள், சட்பல கூறுகளின் வானியல் தொடர்புகள் (சோதிடத்தின் ஒளி சார்ந்த சில பரிமாணங்கள்) பற்றி இந்தப் பாகத்தில் விளக்கப்பட்டுள்ளது. இது சட்பலம் குறித்த கட்டுரையின் முதல் பாகம் ஆகும்.
  • T031 வர்க்கச் சக்கரங்கள் (புள்ளியியல் பார்வையில்)
    சோதிடத்தை புள்ளியியல் பார்வையில் அணுகும் இந்த நெடும்தொடரில், இந்தப் பாகம் பராசரரின் வர்க்கச் சக்கரங்கள் (Divisional Charts) பற்றியதாகும். இந்தக் கட்டுரை வர்க்கச் சக்கரங்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை புள்ளியியல் ரீதியாக உங்களுக்கு தருகிறது. வர்க்கச் சக்கரங்களின் தனித்துவமான கட்டுமானக் கூறுகள், வர்கோத்தம வகைகள், வானியலுக்கும் நவாம்சத்துக்கும் உள்ள சுவையான தொடர்புகள் போன்றவற்றை இந்தப் பாகத்தில் எழுதி உள்ளேன்.
  • T030 கிரக ஆட்சி, உச்சம் நீசம், மூலத்திரிகோணம், நட்பு பகை, கிரகயுத்தம், கிரக அவஸ்தை, கிரக அஸ்தங்கம், வக்கிரம்
    இந்தக் கட்டுரையில், ஆட்சி வீடுகள், கிரகங்களின் உறவுகள் (planetary relationships), மூலத்திரிகோண வீடுகள் (moolatrikona houses), உச்சம் (exaltation) மற்றும் நீச்சம் (debilitation), கிரகயுத்தம் (planetary war), அஸ்தங்கம் (Combustion), வக்கிரம் (retrograde) மற்றும் கிரக அவத்தைகள் (Avastha) பற்றி புள்ளியியல் பார்வையில் தெரிந்து கொள்ளவேண்டிய சங்கதிகள் ஏராளமாக உள்ளன. இந்தத் தொடரில், இந்திய சோதிடம் என்ற புராதானமான கலையின் உள்ளே ஒளிந்திருக்கும் மாபெரும் கணிதக் கட்டுமானங்களை உங்கள் முன்னே விரித்துக் காட்டுகிறேன். நீங்கள் சோதிடம் பற்றிய நம்பிக்கை உடையவரோ அல்லது இல்லாதவரோ, இதனை திறந்த மனதோடு படிக்கும்போது உங்களுக்கு இந்திய சோதிடத்தின் பின்னே உள்ள மாபெரும் கணித மேன்மை கண்டிப்பாக புலப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
  • T029 யோகங்கள், சேர்க்கை, பார்வைகள்
    சோதிட யோகங்கள் மூன்று வகைப்படும். அவை இருபரிமாண அளவில் குறிப்பிடத்தக்க மாறிகளின் கூட்டு விளைவை பலன்களுடன் தொடர்புபடுத்தும் உத்தி ஆகும். இந்தப் பாகத்தில் அவற்றின் புள்ளியியல் சார்ந்த விளக்கங்களைப் பார்க்கலாம். இது சோதிடப் பக்கத்தில் இருந்து எழுப்பப்படும் ஆறாம் தூண். இந்த நெடும்தொடரின் ஒன்பதாம் பாகத்தில், சோதிட யோகங்கள், கிரகச்சேர்க்கை மற்றும் கிரகப்பார்வைகள் பற்றி புள்ளியியல் ரீதியில் அறிய முற்படுவோம். சோதிடத்தில் வேறெந்த வகையிலும் விளக்கமுடியாத சில சோதிடக்கூறுகள் புள்ளியியல் பார்வையில் எளிதாக விளக்கப்படலாம். இவை பற்றிய அறிவு, சோதிடத்தை அறிவியல் சார்ந்து எடுத்துச் செல்ல முற்படும் பலருக்கும் உதவியாக இருக்கும். யான் பெற்ற இன்பம் உங்களுக்கும் கிடைக்கட்டும்! படித்து மற்றும் பகிர்ந்து மகிழவும்! நன்றி!
  • T028 காரகம் அல்லது காரகத்துவங்கள்
    இந்த நெடும்தொடரின் எட்டாம் பாகத்தில், காரகம் அல்லது காரகத்துவங்கள் என்ற சோதிடக் கட்டுமானத்தைப் பற்றி புள்ளியியல் ரீதியான பார்வையில் அலசப் போகிறோம். பலருக்கும் குழப்பத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தும் காரகம் என்ற கட்டுமானம் உண்மையிலேயே மிகவும் எளிமையான ஒரு புள்ளியியல் ஏற்பாடு ஆகும். சோதிடத்தை புள்ளியியல் பார்வையில் ஆழமாகப் புரிந்துகொள்ள இந்த பாகம் உங்களுக்கு மிகவும் உதவக்கூடும்.
  • T027 பாவகம் (புள்ளியியல் பார்வையில்)
    இந்த தொடரின் ஏழாம் பாகத்தில், பராசரர் முறையில் பாவகம் என்ற கட்டுமானத்தைப் பற்றி புள்ளியியல் ரீதியாக பார்க்கப்போகிறோம். சோதிடத்தை நிரூபணம் செய்யவேண்டுமெனில் தேவைப்படும் மாதிரி ஜாதகங்களின் எண்ணிக்கை தேவையை நமது ஞானிகள் எப்படி தீர்த்துவைத்துள்ளனர் என்றும் இன்றைய நவீன தரவு அறிவியலும் புள்ளியியலும் சோதிடக்கட்டுமானத்தில் இருந்து கற்கவேண்டிய இடங்களையும் நான் இந்த பாகத்தில் விளக்கி உள்ளேன்.
  • T026 இலக்கினம் (புள்ளியியல் பார்வையில்)
    இலக்கினம் (புள்ளியியல் பார்வையில்) இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 6. மகரிஷி பராசரர் முறை – பகுதி 1 சோதிடம் மற்றும் புள்ளியியல் என்ற இருவேறு உலகங்களை இணைக்கும் பாலத்தைக் கட்டும் என் முயற்சியில், இந்த பாகத்தில் இலக்கினம் பற்றி பார்க்கப்போகிறோம். இந்தப் பாகத்தை மகரிஷி பராசரர் முறையை நடுநிலையோடு, கலப்படம் செய்யாமல் முறைச்சுத்தம் பேணிப் பின்பற்றிவரும் அனைவருக்கும் மற்றும் இந்திய சோதிடத்தின் தந்தை எனப்படும் மகரிஷி பராசரர் அவர்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்! புதிர்… Read more: T026 இலக்கினம் (புள்ளியியல் பார்வையில்)
  • T025 அயனாம்சம் (புள்ளியியல் பார்வையில்)
    T025 அயனாம்சம் (இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 5) அயனாம்சம் – சோதிடம் மற்றும் புள்ளியியல் என்ற இரு வேறு உலகங்களை இணைக்கும் பாலத்தை கட்டும் என் முயற்சியில், இந்த கட்டுரை இரண்டாம் சோதிடபாகம் ஆகும். இந்த பாகத்தை சோதிடத்தை ஒரு சேவையாக நினைத்து, சக மனிதர்கள் மேல் உண்மையான அக்கறை கொண்டு உழைத்து வரும் அனைவரின் பாதங்களிலும் சமர்ப்பிக்கிறேன். அயனாம்சம் பற்றிய இந்த கட்டுரைக்கு முன்னுரையாக எனது இந்த கட்டுரையை (https://aimlastrology.in/2020/06/t017/) சொல்வேன்.… Read more: T025 அயனாம்சம் (புள்ளியியல் பார்வையில்)
  • T024 அடிப்படை சோதிட கட்டுமானங்கள் (புள்ளியியல் பார்வையில்)
    இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 4. அடிப்படை சோதிட கட்டுமானங்கள் – 1 அடிப்படை கட்டுமானங்கள் – இந்திய சோதிடத்தில் புள்ளியியல் கட்டுமானங்கள் தொடரின் நான்காம் பாகம். சோதிடப் பக்கத்தில் இருந்து எழுப்பப்படும் முதல் தூண். சோதிடம் மற்றும் புள்ளியியல் என்ற இரு வேறு உலகங்களை இணைக்கும் பாலத்தை கட்டும் என் முயற்சியில் இந்த கட்டுரை தொடரின் முதல் சோதிடபாகக் கட்டுமானம் ஆகும். இந்த பாகத்தை என் எல்லா ஆசிரியப் பெருமக்களுக்கும் சமர்ப்பித்து மகிழ்கிறேன்.… Read more: T024 அடிப்படை சோதிட கட்டுமானங்கள் (புள்ளியியல் பார்வையில்)
  • T023 சோதிடத்தில் புள்ளியியல் மாதிரிகள்
    இந்திய சோதிடத்தில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 3. புள்ளியியல் மாதிரிகள் (Statistical Models) அறிமுகம் சோதிடத்தில் புள்ளியியல் மாதிரிகள் (Astrology as a Statistical Modeling framework) சோதிடத்தில் புள்ளியியல் மாதிரிகள் – இந்திய சோதிடத்தில் புள்ளியியல் கட்டுமானங்கள் தொடரின் மூன்றாம் பாகம். புள்ளியியல் பக்கத்தில் இருந்து எழுப்பப்படும் கடைசி பாகம். இந்த தொடரின் முதல் பாகத்தில் சோதிடத்தினை, அதன் விதிகளை ஏன் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பார்த்தோம். இரண்டாம் பாகத்தில் சில அடிப்படை புள்ளியியல் கருதுகோள்களையும்,… Read more: T023 சோதிடத்தில் புள்ளியியல் மாதிரிகள்
  • T022 இந்திய சோதிடத்தில் புள்ளியியல் – சில அடிப்படைகள்
    இந்திய சோதிடத்தில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 2. சில புள்ளியியல் அடிப்படைகள் இந்திய சோதிடத்தில் புள்ளியியல் – இக்கட்டுரையின் முதல் பாகம், இந்த கட்டுரை தொடரின் நோக்கம் மற்றும் அதன் தேவை குறித்து விளக்குகிறது. நீங்கள் இதுவரை படிக்கவில்லை எனில் அதனை முதலில் படித்துவிட்டு தொடர்வது உங்களுக்கு இந்த இரண்டாம் பாகத்தின் தொடர்பை விளக்கும். இது சற்று நீண்ட கட்டுரை. இதற்கென நேரம் ஒதுக்கி பொறுமையாக படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களிடம் ஒரு கேள்வி இந்த தொடர் கட்டுரையின்… Read more: T022 இந்திய சோதிடத்தில் புள்ளியியல் – சில அடிப்படைகள்
  • T021 இந்திய சோதிடத்தில் புள்ளியியல் – அறிமுகம்
    இந்திய சோதிடத்தில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 1. அறிமுகம் மிசேல் காவ்குலின் (Michel Gauquelin). சோதிடத்தில் புள்ளியியல் – சோதிடத்தை தரவு அறிவியல் / புள்ளியியல் சார்ந்து நிரூபிக்கும் முயற்சியில் உள்ளவர்கள், இந்த மனிதரின் முயற்சிகளின் சாயல் இன்றி தங்கள் முயற்சியை முன்னெடுக்க இயலாது. மேற்கத்திய சோதிடத்தை மிகவும் அறிவியல் ரீதியாக அணுகி, புள்ளியியல் ரீதியான சோதனைகள் பல செய்து, சோதிட பலன்களை புள்ளியியல் ரீதியாக நிரூபிக்க முயன்ற, புகழ் பெற்ற பிரெஞ்சு நாட்டு மேதை அவர்.… Read more: T021 இந்திய சோதிடத்தில் புள்ளியியல் – அறிமுகம்
  • T020 பன்னிரண்டு ராசி 27 நட்சத்திரங்களின் இட அமைவு (இறுதி பாகம்)
    T020 நட்சத்திரங்களின் இட அமைவு – பன்னிரண்டு ராசிகளும் 27 நட்சத்திரங்களும்: வானியல் சார்ந்த பார்வை (இறுதி பாகம்)  இந்திய வானியலின் 12 ராசி 27 நட்சத்திரங்கள் – இந்த பாகத்தில் 27 நட்சத்திரங்களின் இட அமைவு மற்றும் அவற்றிற்கு இடையே உள்ள இடைவெளி, அவை எந்த அளவு சோதிட கட்டுமானத்தை வடிவமைக்க உதவி உள்ளன என்பதையும் பார்க்கலாம். இந்த தொடரின் முந்தைய பாகங்களை படித்துவிட்டு, இதனை தொடர்வது உங்களுக்கு உதவியாக இருக்கும். நாம் இந்த கட்டுரையில்… Read more: T020 பன்னிரண்டு ராசி 27 நட்சத்திரங்களின் இட அமைவு (இறுதி பாகம்)
  • T019- 27 நட்சத்திரங்களின் வானியல் தரவுகள்
    T019 பன்னிரண்டு ராசிகளும் 27 நட்சத்திரங்களும்: வானியல் சார்ந்த பார்வை – பாகம் 4 இந்த கட்டுரையில் நாம் நட்சத்திரங்களின் தரவுகள் பற்றிய அலசலை மேற்கொள்ள இருக்கிறோம். இந்த தொடரின் முந்தைய பாகங்களை படித்துவிட்டு, இதனை தொடர்வது உங்களுக்கு உதவியாக இருக்கும். நேரடியாக கட்டுரைக்குள் நுழைவோம். நாம் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கும் எல்லா தரவுகளும் சூரிய மைய அடிப்படையில் அமைந்தவை என்பதை கவனத்தில் கொள்ளவும். தரவு 1 : வெளிப்படையான பிரகாச ஒப்பீடு (Apparent Visual… Read more: T019- 27 நட்சத்திரங்களின் வானியல் தரவுகள்
  • T018 அந்த 27 நட்சத்திரங்கள் – வானியல் பார்வை
    T018 பன்னிரண்டு ராசிகளும் 27 நட்சத்திரங்களும்: வானியல் சார்ந்த பார்வை – பாகம் 3 – அந்த 27 நட்சத்திரங்கள் இந்தக் கட்டுரையின் முதலாம் மற்றும் இரண்டாம் பாகங்களை இதுவரை நீங்கள் படிக்கவில்லை என்றால் அதனை முதலில் படித்துவிட்டு, பிறகு இந்த கட்டுரையை தொடர்வது பயனுள்ளதாக இருக்கும். இந்த கட்டுரை தொடரின் முதல் இரண்டு பாகங்களில் அண்டத்தைப் பற்றியும், வான்வெளியில் சூரியனின் வட்டப் பாதையில் அமைந்த நட்சத்திரங்களின் கற்பனையான இணைவுகளின் அடிப்படையில் அமைந்த 12 ராசிகள் பற்றியும்… Read more: T018 அந்த 27 நட்சத்திரங்கள் – வானியல் பார்வை
  • T017 வானியல் பார்வையில் 12 ராசிகளின் தூரம்
    சோதிட ராசி உருவகங்களின் தூரம் / நீளங்கள் T017 பன்னிரண்டு ராசிகளும் 27 நட்சத்திரங்களும்: வானியல் சார்ந்த பார்வை – பாகம் 2 – ராசி தூரம் ராசி தூரம் – எனது முந்தைய கட்டுரையில் அண்டத்தைப் பற்றியும், வான்வெளியில் சூரியனின் வட்டப் பாதையில் அமைந்த 12 ராசிகள் பற்றியும் சுருக்கமாக பார்த்தோம். மேலும், நட்சத்திரங்களின் கற்பனையான இணைவுகளின் அடிப்படையில் அமைந்த வெவ்வேறான ராசிகளின் உருவ அமைப்பைப் பற்றியும், அவை தேசத்திற்கு தேசம் மாறுபட்டு இருக்கின்றன என்பதையும்… Read more: T017 வானியல் பார்வையில் 12 ராசிகளின் தூரம்
  • T016 பேரண்டம் – 12 ராசிகள்
    பேரண்டம் – பண்டைக்காலத்தில் நம் சோதிட முன்னோர்கள் இரவில் வானத்தை பார்த்தால் எந்த நட்சத்திரம் மற்றும் கிரகம் எங்கே உள்ளது, எந்த ராசி உதயமாகிறது போன்றவற்றை பஞ்சாங்கத்தின் துணை இல்லாமலேயே பார்த்துச் சொல்லக்கூடிய வானியல் அறிவை பெற்று இருந்தார்கள். ஆனால், இந்த காலத்தில் உள்ள சோதிடர்களை அதுபோல வானை பார்த்து நட்சத்திரம் மற்றும் கிரகம் கண்டுபிடிக்க சொன்னால் பெரும்பாலானோர் திணறித்தான் போவார்கள். பெருமளவிலான சோதிட பாடங்கள் ஏட்டு சுரைக்காயாகவே புரிந்துகொள்ளப்பட்டு வருகின்றன. படிப்பதை உண்மையோடு தொடர்புப் படுத்தி… Read more: T016 பேரண்டம் – 12 ராசிகள்
  • T015 சந்திரனின் இடமாறு தோற்றப்பிழை யும் தசைபுக்தி கால கணிதமும்
    T015 சந்திரனின் இடமாறு தோற்றப்பிழை யும் தசைபுக்தி கால கணிதமும் சந்திரனின் இடமாறு தோற்றப்பிழை:  வேத ஜோதிடத்தின் முக்கியமான அடிப்படை கோட்பாடுகளில் ஒன்று உடு தசை / விம்சோத்தரி முறை சார்ந்து பயன்படுத்தப்படும் தசைபுக்தி கால கணிதம் ஆகும். மகரிஷி பராசரர் முறையில் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 120 ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டு, இந்த கால இடைவெளி ஆனது ஒன்பது கிரகங்களுக்கும் வெவ்வேறு அளவில் மகாதசை காலமாக பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மகாதசைகள் மேலும் பகுக்கப்பட்டு… Read more: T015 சந்திரனின் இடமாறு தோற்றப்பிழை யும் தசைபுக்தி கால கணிதமும்
  • Protected: T014 சோதிடத்தில் செயற்கை நுண்ணறிவு – படிநிலைகள் (தொடர்ச்சி)
    This content is password protected.
  • Protected: T013 சோதிடத்தில் செயற்கை நுண்ணறிவு – படிநிலைகள் 1
    This content is password protected.
  • T012 சோதிடத்தில் செயற்கை நுண்ணறிவு – அறிமுகம்
    இந்தக் கட்டுரை கணினிகளின் யுகத்தில், சோதிடத்தில் அடுத்த கட்ட நிலையாக செயற்கை நுண்ணறிவு எவ்வாறு பயன்படக்கூடும் என்பதை உங்களுக்கு உணர்த்தும் ஒரு சிறு அறிமுகம் ஆகும்.
  • T011 கிரகங்களின் உச்சம் மற்றும் நீசம் நிலைகளின் வானியல் சார்ந்த ஆராய்ச்சி – பாகம் 2
    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு. குறள்: #423, அறிவுடைமை, அரசியல், பொருட்பால் உச்சம் மற்றும் நீசம்: இது இரண்டு பாகங்கள் கொண்ட கட்டுரையின் இரண்டாம் பாகம் ஆகும். இந்த கட்டுரையின் முதல் பகுதியை படிக்காதவர்கள், அதை படித்துவிட்டு பிறகு இந்த கட்டுரையை தொடரவும். இந்த கட்டுரையில் குரு மற்றும் சூரியன் சேர்ந்து நான்கு விதமான கிரக நிலைகள் விளக்கப்பட்டுள்ளன. கி-மு இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கிபி 21ஆம் நூற்றாண்டு வரையிலான 2300 வருட கிரக நிலைகள்… Read more: T011 கிரகங்களின் உச்சம் மற்றும் நீசம் நிலைகளின் வானியல் சார்ந்த ஆராய்ச்சி – பாகம் 2
  • T010 கிரகங்களின் உச்சம் மற்றும் நீசம் நிலைகளின் வானியல் சார்ந்த ஆராய்ச்சி – பாகம் 1
    உச்சம் மற்றும் நீசம்: இது இரண்டு பாகங்கள் கொண்ட கட்டுரையின் முதல் பாகம் ஆகும். இந்த கட்டுரையின் பின்புலத்தை இங்கே காண்க.  ஜோதிடத்தின் அடிப்படையான தத்துவங்களில் ஒன்று கிரகங்களின் உச்சம் மற்றும் நீசம் ஆகும். ஆயினும் இந்த உச்சம் மற்றும் நீசம் ஆவதற்கு அறிவியல் ரீதியிலான விளக்கங்கள் உங்களிடம் ஏதேனும் உள்ளதா? இது போன்ற விஷயங்களை நாம் கேள்விகள் எதுவும் கேட்காமலே கடந்து போய் விடுகிறோம். இந்த பதிவின் நோக்கம், அது போன்ற விஷயங்களை நாம் சற்று… Read more: T010 கிரகங்களின் உச்சம் மற்றும் நீசம் நிலைகளின் வானியல் சார்ந்த ஆராய்ச்சி – பாகம் 1
  • T009 ஜோதிடத்தில் ஆராய்ச்சி மனப்பான்மை
    ஜோதிடத்தின் அடிப்படையான தத்துவங்களில் ஒன்று கிரகங்களின் உச்சம் மற்றும் நீச்சம் ஆகும். உதாரணத்திற்கு, குரு கடக ராசியில் 5 பாகையில் உச்சம் அடைகிறார், மகர ராசியில் 5 பாகையில் நீசம் அடைகிறார். இவை பெரும்பாலானோர் அறிந்ததே! ஆயினும் இந்த உச்சம் மற்றும் நீச்சம் ஆவதற்கு அறிவியல் பூரணமான ரீதியிலான விளக்கங்கள் உங்களிடம் ஏதேனும் உள்ளதா? இது போன்ற விஷயங்களை நாம் கேள்விகள் எதுவும் கேட்காமலே கடந்து போய் விடுகிறோம். இந்த பதிவின் நோக்கம், அது போன்ற விஷயங்களை… Read more: T009 ஜோதிடத்தில் ஆராய்ச்சி மனப்பான்மை
  • T008 ஜோதிட விதிகள் – பாகம் 4
    இன்றைக்கு நாம் பார்க்க இருக்கும் பகுதி சோதிடத்தில் விதிகள் – நிறைவுப்பகுதி. நீங்கள் எந்த ஒரு ஜோதிட முறையை பின்பற்றினாலும், இந்த பதிவு உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். இந்தக் கூற்றுகள் பொதுவில் சொல்லப்படுகின்றன. இந்த கட்டுரையில் சொல்லப்படுபவை யாவுமே ஒரு ஜோதிடருக்கு மிகவும் அடிப்படையான, குறைந்தபட்ச தேவைகள் ஆகும். இவை சோதிடத்தை குறைவாக மதிப்பிடவோ அல்லது ஜோதிடரை குறை கூறுவதற்காகவோ சொல்லப்பட்டது அல்ல.   சோதிடத்தின் இறுதியான நோக்கமே, பலன்களை யாருக்கு சொல்கிறோமோ அது அவருக்கு… Read more: T008 ஜோதிட விதிகள் – பாகம் 4
  • T007 சிறந்த சோதிட முறை எது?
    சிறந்த சோதிட முறை: ஒரு எடுத்துக்காட்டு மூலம் இந்த சோதிட முறை கேள்வியை அணுகுவோம். ஒரு கனசெவ்வகத்தை (ஒரு பெரிய அட்டை பெட்டி என்று வைத்துக் கொள்ளுங்கள்) படமாக வரைய சொல்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். அந்த பெட்டிக்கென்று 3 பரிமாணங்கள் உள்ளன. நீங்கள் பார்க்கும் பரிமாணத்தை பொறுத்து இந்த பெட்டி உங்களுக்கு வித்தியாசமாக காட்சி அளிக்கும். பார்ப்பவரின் பார்வை கோணத்தை பொறுத்து பெட்டியின் பரிமாண அளவு மாறக்கூடும் அல்லவா? பலரும் வெவ்வேறு கோணத்தில் இருந்து பார்த்து… Read more: T007 சிறந்த சோதிட முறை எது?
  • T006 ஜோதிட விதிகள்- பாகம் 3
    இக்கட்டுரை இணையதள வகுப்பறை வாத்தியார் திரு. சுப்பையா வீரப்பன் (http://classroom2007.blogspot.com/) அவர்களுக்கு சமர்ப்பணம்! வாத்தியார் நீண்ட வருடங்களாக ஜோதிட ம் பற்றி பலன் எதிர்பார்க்காமல் எழுதி வருகிறார். அவருக்கு இந்த மாணவனின் வந்தனங்கள்! புதிதாக தமிழில் ஜோதிடம் கற்க விரும்பும் மாணவர்கள் இந்த இணையதளத்தின் மூலம் அடிப்படை பாடங்களை மிக எளிதாக படிக்க முடியும். இலவசமாக! 😊 வாத்தியார் திரு. சுப்பையா வீரப்பன் இதுவும் மிகவும் முக்கியமான, ஆனால் சற்று நீண்ட பதிவு. பதிவின் நீளத்தை பொறுத்தருள்க.… Read more: T006 ஜோதிட விதிகள்- பாகம் 3
  • T005 ஜோதிட விதிகள்- பாகம் 2
    இந்தப் பாகம் தெய்வத்திரு. சிவதாசன் ரவி அவர்களுக்கு அர்ப்பணம்! தெய்வத்திரு. சித்தயோகி சிவதாசன் ரவி அவர்களுக்கு தமிழ் சோதிட உலகில் அறிமுகம் தேவை இல்லை. பிருகு நந்தி நாடியை பற்றி தமிழில் ஆழமாக எழுதியதன் மூலமும் எண்ணில் அடங்கா நல்ல மாணவர்களை உருவாக்கியதன் மூலமும் சித்தயோகியார் தன் காலம் கடந்தும் நிலைத்து நிற்பார். இவரிடம் நேரடியாக படிக்க முடியாமல் போனதில் எனக்கு ஆழ்ந்த வருத்தம் உண்டு. எளிதாக சோதிடம் பயில விரும்புவோர் இவரது புத்தகங்களை தேடிப்படியுங்கள். இது மிகவும்… Read more: T005 ஜோதிட விதிகள்- பாகம் 2
  • T004 ஜோதிட விதிகள்- பாகம் 1
    நான் 2016இல் சோதிட கல்விக்குள் நுழைய தூண்டுதலாக  இருந்த நண்பர் திரு. குமரன் சீனிவாசன், அவர் மூலம் அறிமுகம் ஆகிய இணையதள வகுப்பறை வாத்தியார் திரு. சுப்பையா வீரப்பன் (http://classroom2007.blogspot.com/ ), Jagannatha Hora Sri. PVR. Narasimha Rao, தொடர் கல்வி மற்றும் தேடலில் அறிமுகம் ஆகிய அமரர். திரு. ரவி சங்கரன் (சித்தயோகி சிவதாசன் ரவி), திரு. அருள்வேல், திரு. ஆதித்ய குருஜி மற்றும் திரு. கா. பார்த்திபன் முதலான பெரியோர்களுக்கு நன்றி கூறி,… Read more: T004 ஜோதிட விதிகள்- பாகம் 1
  • T003 சோதிடத் தரவுகள் நம்பகத்தன்மை
    இந்த பதிவில் நாம் சோதிடத்தில் நாம் பயன்படுத்தும் அடிப்படையான தரவுகள் எந்த அளவு நம்பிக்கையானவை என்பதை பற்றி பார்க்கலாம். எந்த தரவையும் நீங்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அவற்றை சோதித்து அறிவியல் ரீதியாக சரி என படுவதை மட்டும் ஏற்று செயல்படுத்த வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம். தனிநபர் சோதிடத்தின் மூல தரவாக நாம் அனைவரும் ஏற்றுக்கொள்வது ஒரு ஜாதகரின் பிறந்த ஜாதகம் ஆகும். சோதிடம் என்பது மிகவும் நுண்ணிய கணக்குகளால் கட்டமைக்கப்பட்ட ஒரு துறை என்பதால்,… Read more: T003 சோதிடத் தரவுகள் நம்பகத்தன்மை
  • T002 சோதிடத்தில் நீண்டகால தரவு தொகுப்பின் அவசியம்
    T002 சோதிடத்தில் நீண்டகால தரவு தொகுப்பின் அவசியம் சோதிடம் என்பது முழுக்க முழுக்க தரவு, கணித அறிவியல் சம்பந்தப்பட்ட ஒரு துறை. சூரிய குடும்பத்தில் உள்ள சூரியன் முதல் சனி வரையிலான கிரகங்கள் பூமியில் வாழும் உயிர்கள் மேல் தனது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்ற உண்மையை, கணித ரீதியாக கிரகங்களின் சுழற்சியைக் கொண்டு கணக்கிட்டு, அந்த விளைவுகளை வெவ்வேறாக வகைப்படுத்தி எல்லோருடைய மனிதரின் வாழ்விலும் பொருந்தும் வண்ணம் சுருக்கமான விதிகளாக தொகுத்து கொடுத்ததே சோதிடம் ஆகும். இதனை… Read more: T002 சோதிடத்தில் நீண்டகால தரவு தொகுப்பின் அவசியம்
  • T001 சோதிடத்தில் எனது தொலைநோக்கு பார்வை!
    தொலைநோக்கு: இந்திய ஜோதிடத்தை முற்றிலும் கணித ரீதியாக அணுகினால் அது செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழிக்கற்றல் துறைக்கு அற்புதமாக பொருந்திப் போகும். புதிய தொழில்நுட்பங்கள் மூலம் ஜோதிடத்துறைக்கே புத்தொளி பாய்ச்ச முடியும். கருவிகள் தான் காலத்தின் கையில் உள்ளன. எழுதி வைத்துக்கொள்ளுங்கள்! இன்னும் ஒரு 10 ஆண்டுகளில் ஜோதிடம் இன்று பார்க்கப்படுவது போல் பார்க்கப்படாது! சொல்லும் பலனில் நிச்சயத்தன்மையை கொண்டுவருதன் மூலமே ஜோதிடத்துறையில் நம்பகத்தன்மையை கொண்டுவர முடியும். அதற்கு தரவு அறிவியலும் (data science) பழக்கப்படுத்தப்பட்ட… Read more: T001 சோதிடத்தில் எனது தொலைநோக்கு பார்வை!

Feel welcome to share your comments or feedback!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This Post Has One Comment

  1. Ramanathan

    Very good Website for learning Astrology Details in Tamil