மகரிஷி பராசரர் முறையின் சிகரம் என்று கருதப்படும் தசை புக்தி அந்தரம் என்ற கட்டமைப்பின் புள்ளியியல் சார்ந்த பார்வையை இந்த கட்டுரை உங்களுக்கு அளிக்கும். இரண்டு ஆண்டுகளாக இந்த கட்டுமானத்தை புரிந்து கொள்ள முயற்சித்த பின்னர் பிறகு இந்த கட்டுரையை எழுத துணிந்துள்ளேன். இந்த கட்டுரையின் காணொளி வடிவம் இங்கே தனி வகுப்பாக முதலில் வெளியாகிறது. இந்தக் காணொளி நான் கடந்த ஒரு வருடமாக நடத்தி வரும் எக்செல் மென்பொருள் ஊடாக சோதிட கணிதம் என்ற தொடருக்காக உருவாக்கப்பட்டது. எனவே பிற கூறுகளும் அதில் கலந்து இருக்கும்.
நேரம் கிடைக்கும் போது இந்த கட்டுரையை வரி வடிவில் இன்னும் விரிவாக எழுதுகிறேன்.
தசை என்பது ஒரு குறிப்பிட்ட கால சுழற்சி முறையின் தொகுப்பு ஆகும். அது மேலும் மேலும் நுணுகி நோக்கினால் புக்தி, அந்தரம், சூட்சுமம் என்று விரியும். இந்த அமைப்பு ஒரு தனித்துவமான ஒழுங்கில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தசைகள் நட்சத்திரம், ராசி மற்றும் பிற அமைப்புகளை ஆதாரமாக கொண்டு உருவாக்கப்படுகின்றன.
பராசரர் 32 தசைகளை குறிப்பிடுகிறார். பொதுவான தசை அமைப்பு நான்கு கூறுகளால் கட்டமைக்கப்படுகிறது. ஆதார நட்சத்திரம் அல்லது ராசி, அதன் அடிப்படையில் அமைந்த நட்சத்திர ஒதுக்கீடு, கிரக வரிசை மற்றும் விலக்கப்பட்ட கிரகங்கள், வரிசைப்படி ஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய கால அளவு, ஏறுவரிசையா அல்லது இறங்கு வரிசையா என்ற நான்கு கூறுகளால் ஒரு குறிப்பிட்ட தசை உருவாக்கும் சுழற்சி தீர்மானிக்கப்படுகிறது. இதன் கட்டுமானம் மிகவும் உச்ச கட்ட கணித அறிவின் நேர்த்தியான வெளிப்பாடு ஆகும்.
மேலும் விரிவான கட்டுரை விரைவில் வெளியிட முயற்சிக்கிறேன். காணொளியைப் பார்த்து வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பின்னூட்டம் இடலாம்.