தொலைநோக்கு: இந்திய ஜோதிடத்தை முற்றிலும் கணித ரீதியாக அணுகினால் அது செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழிக்கற்றல் துறைக்கு அற்புதமாக பொருந்திப் போகும். புதிய தொழில்நுட்பங்கள் மூலம் ஜோதிடத்துறைக்கே புத்தொளி பாய்ச்ச முடியும். கருவிகள் தான் காலத்தின் கையில் உள்ளன.
எழுதி வைத்துக்கொள்ளுங்கள்! இன்னும் ஒரு 10 ஆண்டுகளில் ஜோதிடம் இன்று பார்க்கப்படுவது போல் பார்க்கப்படாது! சொல்லும் பலனில் நிச்சயத்தன்மையை கொண்டுவருதன் மூலமே ஜோதிடத்துறையில் நம்பகத்தன்மையை கொண்டுவர முடியும். அதற்கு தரவு அறிவியலும் (data science) பழக்கப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவுத்துறையும் (Artificial Intelligence and Machine Learning) இன்றியமையாத தோழனாக அமையும்.
ஆம். உண்மைதான். சூழலுக்கு ஏற்ப ஜோதிடர்களும் தங்களை தகவமைத்துக் கொள்ளவேண்டும்,
I agree with you siva subramanian
இருபது வருடங்களுக்கு முன்பு எத்தனை பேர் உண்மையாக கணக்கு போட்டிருப்பார்கள்? விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் கூட இல்லை. இன்று software துணை கொண்டு தான் 99% வண்டி ஓடுது. இது பரிணாம வளர்ச்சி என்றால் நீங்கள் சொல்வதும் சாத்தியம் தானே. இன்னும் பத்து வருடங்களுக்கு பிறகு நீங்கள் சொல்வது போல நிச்சயம் நடக்கும். A lot of research and concrete base is required. உங்கள் விதை விருட்சமாக வளர வாழ்த்துக்கள். சிவகுமார்..
கணிணிகளிடம் பொறுப்பை ஒப்படைக்கும் போது எண்கள் மற்றும் சோதிட கணிதம் ரீதியாக தெளிவான விளக்கங்கள் தரப்பட வேண்டும். அது கற்றுக்கொடுப்பவற்கும் ஒரு தேர்வு ஆகும். வாய்ஜாலம் கணிணிகள் முன் எடுபடாது. தெளிவாக எண்களாக சொல்லிக்கொடுத்தால் என் கனவு சாத்தியமே. இது ஒரு நீண்ட பயணமே. உங்கள் வாழ்த்துக்கு நன்றி!
தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்