
மூத்தோர் ஜோதிட ஞானம். புள்ளியியல் பார்வையில்.
வணக்கம்! AIML Astrology தங்களை அன்புடன் வரவேற்கின்றது!
தங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்!
இந்திய ஜோதிடத்தை நவீன தரவு அறிவியல் மற்றும் புள்ளியியல் பார்வையில் அணுகும் ஒரு முயற்சி இந்த வலைத்தளம் ஆகும்.
சோதிடம் தொடர்பான எனது சிந்தனைகளை, கட்டுரை வடிவில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகளிலும் நான் இந்தத் தளத்தில் வெளியிடுகிறேன். தமிழ் மொழியில் அனைத்து கட்டுரைகளையும் படிக்க, இங்கே உரலியை சொடுக்கவும்.
பொதுவாக படிக்கும் ஆர்வம் மற்றும் நேரம் குறைந்து பொதுமக்கள் காட்சி ஊடகங்களில் அதிகம் நேரம் செலுத்துவது அதிகரித்துவிட்டபடியால் நானும் காணொலிகளாக உள்ளடக்கம் என்பதை உருவாக்குவதை நோக்கிக் கொஞ்சம் நகர்ந்து உள்ளேன்.
நான் 2023 ஆம் ஆண்டு முழுக்க நடத்திய இந்திய சோதிடக் கணித வகுப்புகளின் தொகுப்புக்கு இங்கே கிளிக் செய்யவும்.
2024-2026: பொதுமக்களுக்கான ஜோதிடம் என்ற நீண்ட தொடரில் பல விஷயங்களை நான் பகிர்ந்து வருகிறேன். ஜோதிடத்தை தாண்டி பொதுவான மனித குல வரலாறு மற்றும் நவீன அறிவியல் காணொளிகளும் என்னுடைய இந்த முயற்சியில் இடம் பெற்றுள்ளன. அந்தக் காணொலிகளை நீங்கள் இங்கே பார்க்கலாம்.
உங்களுக்கு தேவை எனில், எனது கட்டண சோதிட சேவைகளை பெற, இங்கே உரலியை அழுத்தவும்.
இந்த வலைத்தளத்தின் நோக்கம்
சோதிடம் வேதங்களின் கண் என்று போற்றப்படுகிறது. மனிதகுலம் பெறத்தக்க மிகப்பெரிய கணித அறிவாக சோதிடம் நம் முன்னோர்களால் கருதப்பட்டது. சோதிடத்தினை தரவு அறிவியலின் (data science) துணை கொண்டு நோக்கினோம் என்றால் சோதிடத்தின் உள் கட்டமைப்பில் நமது முன்னோர்கள் செய்து வைத்துள்ள மகத்தான சாதனைகள் புலப்படும். இன்றைய நவீன புள்ளியியல் மற்றும் தரவு அறிவியலின் அடிப்படை கோட்பாடுகளாகவும் உச்சக்கட்ட வளர்ச்சியாகவும் சொல்லப்படுகின்ற பல விஷயங்களையும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது முன்னோர்கள் சோதிட துறையில் மிக நேர்த்தியாகவும், தெளிவாகவும், போகின்ற போக்கில் மிகவும் சாதாரணமாகவும் பயன்படுத்தி உள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு (artificial intelligence), இயந்திர வழிக் கற்றல் (machine learning) மற்றும் ஆழ்ந்த கற்றல் (deep learning) மூலம் நமது முன்னோர்களின் உருவாக்கி வைத்துள்ள கணித அறிவின் உச்சங்களை நாம் அறிந்து கொள்ளலாம். அவர்களின் புள்ளியியல் / தரவு அறிவியல் அறிவுக்கட்டுமானத்தை சரியாக புரிந்து கொள்வதன் மூலம், மற்ற துறைகளிலும் அவற்றை பிரயோகப்படுத்தி மேம்பட்ட தீர்வுகளை அடைய முடியும்.
எனது இந்த வலைப்பூவில் சோதிடத்தில் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தேவை பற்றியும், எவ்வாறு செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழிக் கற்றலை சோதிடத்தில் கொண்டு வர முடியும் என்றும் அதற்கு தேவையான அடிப்படை அலகுகள், கட்டமைப்புகள், சீர்த்திருத்தங்கள் பற்றியும் நான் எனது கருத்துக்களை கட்டுரை வடிவில் பகிர்கின்றேன். சோதிடத்தில் நான் காணும் தரவு அறிவியல் கோட்பாடுகளையும் உத்திகளையும் கூட எனது கட்டுரைகளில் நான் விரிவாக விளக்குவேன். எனது இந்த முயற்சிகளின் மூலம் AIMLAstrology.in மூலம் சோதிடத்தை அறிவியல் சார்ந்து மேலான ஒரு தளத்துக்கு எடுத்துச்செல்வது எனது குறிக்கோள் ஆகும்.
நான் இந்த தளத்தின் மூலம் என்னைப்போல் சோதிடத்தினை தரவு அறிவியல் சார்ந்து முன்னெடுத்து செல்லும் ஆர்வம் உள்ளவர்களை ஒருங்கிணைத்து, அவர்களுடன் இணைந்து அனைவருக்கும் பயன்படும் வகையில் தரவு தொகுப்புகள், கருவிகள், முறைகள், மென்பொருட்கள், வகுப்புகள், ஆராய்ச்சிகள் ஆகியவற்றை முன்னெடுக்க விரும்புகிறேன்.
உங்களுக்கு இந்த முயற்சியில் பங்கு பெற ஆர்வமும், சோதிடம் அல்லது தரவு அறிவியலில் தொழில் அறிவும், சோதிட சமூகத்திற்கு சேவை செய்ய மனமும் நேரமும் இருந்தால், என்னை மின்னஞ்சல் (admin@aimlastrology.in) மூலம் தொடர்பு கொள்ளலாம். இது ஒரு நீண்ட பயணம் ஆக இருக்கக்கூடும். இந்த முயற்சியின் விளைபொருட்கள் நம் சந்ததிகளுக்கு நாம் விட்டுச்செல்லும் அறிவுப்பரிசாக அமையும். இந்த முயற்சியில் பங்கெடுத்துக்கொள்ள நான் உங்களை அன்போடு அழைக்கிறேன். வாருங்கள் இணைந்து பயணிப்போம்!
தங்கள் கூடுதல் தகவலுக்கு:
பொருளாதார தன்னிறைவு இன்றி எந்த ஒரு நீண்ட கால முயற்சியும் சாத்தியம் இல்லை. பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை என்பது ஐயன் வள்ளுவர் வாக்கு. எனவே, இந்த வலைத்தளத்தை மற்றும் என்னுடைய முயற்சிகளை தொடரும் பொருட்டு, AIML Astrology LLC என்ற நிறுவனத்தை நான் வாழும் நியூ ஜெர்சியை இடமாக கொண்டு ஆரம்பித்து என் முயற்சிகளை மேற்கொள்கிறேன். எனது தினசரி வருமானம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பொருள் இந்த தளத்தின் மூலம் வரவில்லை. இந்த தளத்தின் வருமானம் அனைத்தும் ஜோதிடத்தை மற்றும் நான் வாழும் சமூக நலனுக்காகவே செலவிடப்படுகின்றன.
AIML Astrology LLC is a registered tax paying private business entity in New Jersey, USA. The copyright of the materials published in internet under the broader umbrella term “AIML Astrology” or “aimlastrology” or its variants belong to Dr Ramesh Thangavel, PhD. No part of the contents published by this entity shall be used for any commercial benefits including teaching or training AI based language models.
