T031 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 11. வர்க்கச் சக்கரங்கள்
சோதிடத்தை புள்ளியியல் பார்வையில் அணுகும் இந்த நெடும்தொடரில், இந்தப் பாகம் பராசரரின் வர்க்கச் சக்கரங்கள் (Divisional Charts) பற்றியதாகும். இந்தக் கட்டுரை வர்க்கச் சக்கரங்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை புள்ளியியல் ரீதியாக உங்களுக்கு தருகிறது. வர்க்கச் சக்கரங்களின் தனித்துவமான கட்டுமானக் கூறுகள், வர்கோத்தம வகைகள், வானியலுக்கும் நவாம்சத்துக்கும் உள்ள சுவையான தொடர்புகள் போன்றவற்றை இந்தப் பாகத்தில் எழுதி உள்ளேன்.