T029 யோகங்கள், சேர்க்கை, பார்வைகள்
சோதிட யோகங்கள் மூன்று வகைப்படும். அவை இருபரிமாண அளவில் குறிப்பிடத்தக்க மாறிகளின் கூட்டு விளைவை பலன்களுடன் தொடர்புபடுத்தும் உத்தி ஆகும். இந்தப் பாகத்தில் அவற்றின் புள்ளியியல் சார்ந்த விளக்கங்களைப் பார்க்கலாம். இது சோதிடப் பக்கத்தில் இருந்து எழுப்பப்படும் ஆறாம் தூண். இந்த நெடும்தொடரின் ஒன்பதாம் பாகத்தில், சோதிட யோகங்கள், கிரகச்சேர்க்கை மற்றும் கிரகப்பார்வைகள் பற்றி புள்ளியியல் ரீதியில் அறிய முற்படுவோம். சோதிடத்தில் வேறெந்த வகையிலும் விளக்கமுடியாத சில சோதிடக்கூறுகள் புள்ளியியல் பார்வையில் எளிதாக விளக்கப்படலாம். இவை பற்றிய அறிவு, சோதிடத்தை அறிவியல் சார்ந்து எடுத்துச் செல்ல முற்படும் பலருக்கும் உதவியாக இருக்கும். யான் பெற்ற இன்பம் உங்களுக்கும் கிடைக்கட்டும்! படித்து மற்றும் பகிர்ந்து மகிழவும்! நன்றி!