எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
குறள்: #423, அறிவுடைமை, அரசியல், பொருட்பால்
உச்சம் மற்றும் நீசம்: இது இரண்டு பாகங்கள் கொண்ட கட்டுரையின் இரண்டாம் பாகம் ஆகும். இந்த கட்டுரையின் முதல் பகுதியை படிக்காதவர்கள், அதை படித்துவிட்டு பிறகு இந்த கட்டுரையை தொடரவும்.
இந்த கட்டுரையில் குரு மற்றும் சூரியன் சேர்ந்து நான்கு விதமான கிரக நிலைகள் விளக்கப்பட்டுள்ளன. கி-மு இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கிபி 21ஆம் நூற்றாண்டு வரையிலான 2300 வருட கிரக நிலைகள் அலசப்பட்டு உள்ளன.
- குரு உச்சம் மற்றும் வக்கிரம்
அவற்றில் குரு கடகத்தில் ஐந்து பாகையிலும் சூரியன் அதேநேரத்தில் மகரத்தில் ஐந்து பாகையிலும் வருகின்ற நாட்கள் கணக்கிடப்பட்டு கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த குறிப்பிட்டுள்ள நாட்களுக்கு அடுத்த கட்டத்தில் பூமிக்கும் வியாழன் கிரகத்துக்கும் இடையேயான நேர்கோட்டு தூரம் வானியல் அலகு அளவில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த 12 வெவ்வேறு நாட்களின் சராசரி (Mean) மற்றும் திட்ட விலக்கம் (Standard Deviation) 4.28857± 0.02138 வானியல் அலகு (AU) ஆகும்.
இவற்றில் எண் 8 என்று குறிப்பிடப்பட்டுள்ள நாளின் (30/12/1017) நேர்கோட்டு தூரம் கீழே உள்ள படத்தில் மாதிரிக்காக காட்டப்பட்டுள்ளது. படத்தில் உள்ள பச்சை நிற கோடு இரு கிரங்களுக்கு இடையிலான தூரத்தை இந்த குறிப்பிட்ட நாளின் முன்னும் பின்னும் உள்ள 300 நாட்களுக்கு காட்சிப் படுத்துகிறது.
இந்த படத்தை கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் குறிப்பிடப்பட்ட அன்று இந்த தூரமானது மிகவும் குறைவாக அமைந்துள்ளதை காணலாம். இந்த குறைவான நேர்கோட்டு தூரம் உள்ள புள்ளிக்கும், அதிகமாக உள்ள புள்ளிக்கும் இடையேயான கால வேறுபாடு தோராயமாக 190 நாட்கள் ஆகும்.
2. குரு நீச்சம் மற்றும் வக்கிரம்
குரு மகரத்தில் ஐந்து பாகையிலும் சூரியன் அதேநேரத்தில் கடகத்தில் ஐந்து பாகையிலும் வருகின்ற நாட்கள் கணக்கிடப்பட்டு கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த 11 வெவ்வேறு நாட்களின் சராசரி (Mean) மற்றும் திட்ட விலக்கம் (Standard Deviation) 4.10871± 0.00350 வானியல் அலகு (AU) ஆகும்.
இவற்றில் எண் 6 என்று குறிப்பிடப்பட்டுள்ள நாளின் (4/7/1095) நேர்கோட்டு தூரம் கீழே உள்ள படத்தில் மாதிரிக்காக காட்டப்பட்டுள்ளது.
3. குரு உச்சம் மற்றும் அஸ்தங்கம்
குரு மற்றும் சூரியன் கடகத்தில் ஐந்து பாகையில் ஒரே நேரம் வருகின்ற நாட்கள் கணக்கிடப்பட்டு கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த 17 வெவ்வேறு நாட்களின் சராசரி (Mean) மற்றும் திட்ட விலக்கம் (Standard Deviation) 6.27807± 0.00364 வானியல் அலகு (AU) ஆகும்.
இவற்றில் எண் 15 என்று குறிப்பிடப்பட்டுள்ள நாளின் (21/7/1919) நேர்கோட்டு தூரம் கீழே உள்ள படத்தில் மாதிரிக்காக காட்டப்பட்டுள்ளது.
4. குரு நீச்சம் மற்றும் அஸ்தங்கம்
குரு மற்றும் சூரியன் மகரத்தில் ஐந்து பாகையில் ஒரே நேரம் வருகின்ற நாட்கள் கணக்கிடப்பட்டு கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த 17 வெவ்வேறு நாட்களின் சராசரி (Mean) மற்றும் திட்ட விலக்கம் (Standard Deviation) 6.10601± 0.00444 வானியல் அலகு (AU) ஆகும்.
இவற்றில் எண் 15 என்று குறிப்பிடப்பட்டுள்ள நாளின் (27/12/537) நேர்கோட்டு தூரம் கீழே உள்ள படத்தில் மாதிரிக்காக காட்டப்பட்டுள்ளது. அன்றைய கிரக நிலையும் நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இந்த ஆராய்ச்சியின் முடிவுகள்:
- நான் மேற்கொண்ட இரண்டு கருதுகோள்களின் அடிப்படையில் மட்டும் கிடைத்துள்ள தரவு புள்ளிகளினை ஆராய்ந்து பார்க்கும் போது, குரு கடகத்தில் உச்சமாவதை விட அது மகரத்தில் 5 பாகையில் நீச்சமடையும் போதுதான் அது பூமிக்கு மிகவும் அருகாமையில் வருகிறது என்பது உறுதியாகிறது. இந்த ஆய்வு திரு VP Jain (Exaltation & Debilitation – Astronomically ‐ 1 , 28 Feb 2009, Page 207) அவர்களின் கருத்தோடு ஒத்துப்போகிறது. அவரது ஆய்வு கட்டுரைக்கான சுட்டி இது -> https://issuu.com/saptarishisastrology1/docs/26-exaltationdebilitationofpla
- அது போல கடகத்தில் சேர்வதைவிடவும், குரு மகரத்தில் சூரியனுடன் சேரும் போதுதான் பூமிக்கும் குருவிற்கும் இடையிலான தூரம் குறைவாக உள்ளது என்பதும் இந்த தரவு புள்ளிகளின் அடிப்படையில் உறுதி ஆகிறது.
இந்த குறைந்த அளவிலான ஆராய்ச்சியின் அடிப்படையில் பார்க்கும் போது, ஒரு கிரகம் உச்சமடையும் போது அது பூமிக்கு அருகில் வருகிறது என்பது வானியல் அடிப்படையில் சரியான விளக்கம் அல்ல என்பது உறுதி ஆகிறது.
எனது ஆராய்ச்சி ஒரு சிறு முயற்சியே. இப்போதுள்ள கருவிகளின் அடிப்படையில் இது போன்ற கணக்கீடுகளை செய்ய ஆகும் காலம் சற்று அதிகம் ஆகிறது. இந்த ஆய்வை செய்து முடிக்க எனக்கு சில வாரங்கள் தேவைப்பட்டது. எனக்கு மேலும் நேரம் கிடைக்கும் போது இதனை தொடரலாம் என்று உள்ளேன். உங்களில் யாரேனும் இந்த வழியில் ஆராய்ச்சியை மேற்கொண்டு தொடர விரும்பினால் வழி காட்டுதலுக்கு என்னை தொடர்பு கொள்ளவும் (info@aimlastrology.in) .
உங்களில் யாரேனும் இந்த முயற்சியை தொடர விரும்பினால் உங்களுக்கான குறிப்புகளை இங்கே தருகிறேன்.
சோதிட மற்றும் வானியல் ஆர்வலர்களுக்கான அடுத்த கட்ட ஆராய்ச்சிக்கான விதைகள்:
- இந்த ஆராய்ச்சி முறையானது மற்ற ராசிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். இந்த கட்டுரையில் 4 விதமான இணைவுகள் மட்டும் விளக்கப்பட்டுள்ளன. மொத்தம் 144 வகை இணைவுகள் உள்ளன.
- குருவிற்கு கணக்கிட்டது போல மற்ற வெளிவட்ட மற்றும் உள்வட்ட கிரகங்களின் தூரமும் அதனதன் உச்ச மற்றும் நீச்ச ராசிக்கும் மற்ற ராசிகளுக்கும் கணக்கிடப்பட வேண்டும்.
- சூரியனை தவிர்த்து மற்ற இரு அல்லது பல கிரகங்களின் கூட்டாக இந்த தூர ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவேண்டும்.
ஆராய்ச்சி உபகரண உதவிகள் (Resource Credits):
- நாள் கணக்கீடுகள் உதவி மென்பொருள்: Sri Jyothi Star 9 Pro (https://www.vedicsoftware.com/)
- வானியல் அலகு தூர கணக்கீடுகள் மற்றும் வரைபட உதவி மென்பொருள்: Stellarium V 0.19.3 (https://stellarium.org/)
Sir Im thiyagu and im an electrical engg.I really appreciate your deep research on astrology.I too have been on research on astrology since last five years. According to my research exaltation and debilitation is not depends on the planets which near to earth. Its completely based on space time.how the Jupiter curves the space time according to the position of existing zodiac sign.
Thanks for your feedback. I think you should put together a write up on what you observed. Please note that we have something called an ayanamsa correction as well which can create issues in trying to explain this astrological construct only through pure astronomical data.
Hi Ramesh, Hope you are doing well, I am seeking your help based on the research, what is the range of Jupiter gets exalted in Cancer and it is debilitated in Capricorn Like 1 Degree to 5 Degree or 2 to 6 Degree. Please explain in details. which star Jupiter gets exalted in Cancer and it is debilitated in Capricorn. Looking forward to hear from you. Thank you. S.Kumanan
பரம உச்ச பாகைகள் மற்றும் பரம நீச பாகை அளவுகள் பெரும்பாலான அடிப்படை சோதிட நூல்களிலேயே கிடைக்கும். உச்ச நீசம் தொடர்பான வேறு ஒரு கட்டுரையும் எனது கட்டுரை தொகுப்பில் உள்ளது.
Thank you very much for reply
Pingback: T035 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 15. சட்பலம் – நான்காம் பாகம் – சேஷ்ட ப