
சிறந்த சோதிடமுறை:
ஒரு எடுத்துக்காட்டு மூலம் இந்த சோதிடமுறை கேள்வியை அணுகுவோம். ஒரு கனசெவ்வகத்தை (ஒரு பெரிய அட்டை பெட்டி என்று வைத்துக் கொள்ளுங்கள்) படமாக வரைய சொல்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். அந்த பெட்டிக்கென்று 3 பரிமாணங்கள் உள்ளன. நீங்கள் பார்க்கும் பரிமாணத்தை பொறுத்து இந்த பெட்டி உங்களுக்கு வித்தியாசமாக காட்சி அளிக்கும். பார்ப்பவரின் பார்வை கோணத்தை பொறுத்து பெட்டியின் பரிமாண அளவு மாறக்கூடும் அல்லவா? பலரும் வெவ்வேறு கோணத்தில் இருந்து பார்த்து வரையும் போது யாராவது வரைந்த ஒரு படம் மட்டும் சரி என்று எப்படி கூற முடியும்? எல்லாமே பெட்டியை தானே விளக்குகின்றன? அதே நேரம், நீங்கள் பெட்டியின் வெவ்வேறான இரண்டு பரிமாணங்களையாவது பார்த்தால் உங்களுக்கு பெட்டியின் விஸ்தீரணம் ஓரளவு நன்றாக புலப்படும் அல்லவா?
நிற்க!
சோதிடத்தில் நாம் 3 பரிமாணங்களை பார்த்தோமே. இப்போது சொல்லுங்கள். நீங்கள் சோதிடத்தை எந்த சோதிடமுறை யில் அணுகினாலும் அதையும் தாண்டி வேறு பரிமாணங்களில் ஒரு சாதகத்தை அணுக முடியும் அல்லவா? அப்படியெனில், ஒரு சோதிடமுறை தான் சிறந்தது என்று எப்படி ஒருவர் உரிமை கூற முடியும்? ஒரு சோதிடமுறையின் மேம்பாட்டை தனிப்பட்ட ஜாதகங்கள் தான் முடிவு செய்கின்றன. ஜாடிக்கு ஏற்ற மூடி வேண்டும்!

மேலே உள்ள படங்களை பாருங்கள். இதில் எந்த படம் ஒரு யானையை முழுதாக உருவகப்படுத்துக்கிறது? பதில்: தனிப்பட்ட எந்த படமும் இல்லை. சோதிடத்தின் பரிமாணங்களும் அது போலத்தான். நீங்கள் பல பரிமாணங்களில் இருந்து சரியாக பார்க்க தெரிந்தால் உங்கள் பலன்கள் உண்மைக்கு அருகில் வரலாம்.
கற்றது கை மண் அளவே!
வளரும்…
Pingback: T026 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 6. மகரிஷி பராசரர் முறை - பகுதி 1 - AI ML in Astrolog
Pingback: T012. சோதிடத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழிக்கற்றல்: பாகம் 1 - அறிமுகம் - AI ML in Astrology