T039 புள்ளியியல் பார்வையில் அஷ்டகவர்க்கம் – நிறைவு பாகம்
அஷ்டகவர்க்கம் பற்றிய குறும் தொடரின் இந்த நிறைவு பாகத்தில், அஷ்டகவர்க்கத்தின் 6 படிநிலைகளில் இறுதியான திரிகோண சுருக்கம், ஏகாதிபத்திய சுருக்கம் மற்றும் சுத்த பிண்டம் பற்றிய புள்ளியியல் ரீதியிலான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இந்த பாகத்தில் அஷ்டகவர்க்கத்தின் சில நவீனகால பயன்பாடுகள் கூடுதலாக விளக்கப்பட்டுள்ளன. பரிமாண சுருக்கம் (dimension reduction) என்ற நவீனகால புள்ளியியல் பயன்பாடு இந்திய சோதிடத்தில் நம் முன்னோர்களால் எவ்வாறு நெடும்காலம் முன்பே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமே! இந்தக் கட்டுரை தொடரின் மூலம் பெறும் தெளிவு, உங்களுக்கு இந்த முறையின் சரியான பயன்பாடு பற்றிய அறிவை இன்னும் அதிகரிக்கக்கூடும்.