T036 சட்பலம் – தொகுத்த பார்வை
இந்திய சோதிடத்தில் புள்ளியியல் எனும் நெடும்தொடரில் இந்தப் பாகத்தில், பராசரர் முறையின் சட்பலம் என்னும் கட்டுமானத்தின் திரண்ட திறனாய்வு, அதன் மேன்மைகள், சரியான பயன்பாடுகள் போன்றவை விளக்கப்பட்டுள்ளன. இந்த பாகம் சட்பல கணிதத்தில் உள்ள புள்ளியியல் நுணுக்கங்கள், கட்டுமான மேன்மை ஆகியவை பற்றி உங்களுக்கு அறியத்தரும். சட்பலத்தை நீங்கள் இதுவரை அறிந்திராத மேன்மையானதொரு கோணத்தில் வாசித்து அறிய உங்களை நட்போடு அழைக்கிறேன்!