T032 நைசர்கிக பலம் & ஸ்தான பலம் (சட்பலம் புள்ளியியல் பார்வையில்)
சட்பலம் இந்தக் கட்டுரை கிரக சட்பலம் / ஷட்பலம் / ஆறுவித பலம் என்ற பராசர முறையின் உயர்நிலை கட்டுமானம் பற்றி புள்ளியியல் பார்வையில் அலசுகிறது. சட்பலம் என்றால் என்ன, அவற்றின் கூறுகள், அவற்றின் முக்கியத்துவம், அவற்றை தருவிக்கும் முறையின் புள்ளியியல் தனித்துவங்கள், சட்பல கூறுகளின் வானியல் தொடர்புகள் (சோதிடத்தின் ஒளி சார்ந்த சில பரிமாணங்கள்) பற்றி இந்தப் பாகத்தில் விளக்கப்பட்டுள்ளது. இது சட்பலம் குறித்த கட்டுரையின் முதல் பாகம் ஆகும்.