T034 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 14. சட்பலம் – மூன்றாம் பாகம் – திக்பலம், திருக்பலம்
இந்திய சோதிடத்தில் புள்ளியியல் எனும் நெடும்தொடரில் இந்தப் பாகத்தில், பராசரர் முறையின் சட்பலம் என்னும் கட்டுமானத்தின் உட்கூறாகிய திக்கு பலம் மற்றும் திருக் பலம் ஆகியவை புள்ளியியல் ரீதியில் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளன என்றும் அவற்றின் தனித்துவமும், புள்ளியியல் நுணுக்கங்களும் விளக்கப்பட்டுள்ளன. கிரகப் பார்வைகள் குறித்து இதுவரை நீங்கள் எங்கும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லாத, தரவுகளின் காட்சிப்படுத்துதலோடு (data visualization) கூடிய விளக்கங்கள் இந்தக் கட்டுரையில் உங்களுக்கு கிடைக்கும். சோதிடத்தில் சட்பலத்தினைப் பற்றிய உங்கள் புரிதல் அடுத்த நிலைக்கு செல்வதற்கு இந்தக் கட்டுரை உத்திரவாதம்!