T030 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 10. மகரிஷி பராசரர் முறை – பகுதி 5
இந்தக் கட்டுரையில், ஆட்சி வீடுகள், கிரகங்களின் உறவுகள் (planetary relationships), மூலத்திரிகோண வீடுகள் (moolatrikona houses), உச்சம் (exaltation) மற்றும் நீச்சம் (debilitation), கிரகயுத்தம் (planetary war), அஸ்தங்கம் (Combustion), வக்கிரம் (retrograde) மற்றும் கிரக அவத்தைகள் (Avastha) பற்றி புள்ளியியல் பார்வையில் தெரிந்து கொள்ளவேண்டிய சங்கதிகள் ஏராளமாக உள்ளன. இந்தத் தொடரில், இந்திய சோதிடம் என்ற புராதானமான கலையின் உள்ளே ஒளிந்திருக்கும் மாபெரும் கணிதக் கட்டுமானங்களை உங்கள் முன்னே விரித்துக் காட்டுகிறேன். நீங்கள் சோதிடம் பற்றிய நம்பிக்கை உடையவரோ அல்லது இல்லாதவரோ, இதனை திறந்த மனதோடு படிக்கும்போது உங்களுக்கு இந்திய சோதிடத்தின் பின்னே உள்ள மாபெரும் கணித மேன்மை கண்டிப்பாக புலப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.